சென்னை டூ ஊட்டி... இ-பாஸ் இல்லாம 500 கி.மீ 'டிராவல்' செய்து... கொரோனாவுடன் 'ஊருக்குள்' நடமாடிய நபர்... தலை சுற்ற வைக்கும் டிராவல் ஹிஸ்டரி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இ-பாஸ் இல்லாமல் சென்னை கோயம்பேட்டில் இருந்து நீலகிரி மாவட்டம் பிக்கட்டிக்கு சென்றுள்ளார்.

கொரோனா காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வது கடும் சோதனை தரும் விஷயமாக மாறியுள்ளது. ஆனால் இ பாஸ் எடுக்காமல் சென்னையில் இருந்து ஒரு நபர் நீலகிரி மாவட்டம் வரை பயணித்து அனைவரையும் அதிர வைத்து இருக்கிறார்.
நீலகிரி மாவட்டம் பிக்கட்டி பகுதியை சேர்ந்த 54 வயது நபர் ஒருவர் சென்னை கோயம்பேட்டில் காய்கறி கடை நடத்தி வந்துள்ளார். ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல எண்ணி சென்னையில் இருந்து வேலூர் வரை நடந்தே சென்றுள்ளார். அங்கிருந்து சேலம் வரை லாரியில் பயணித்து இருக்கிறார்.
அங்கிருந்து ஒரு சரக்கு லாரி மூலம் சேலத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து கோவைக்கு ஒரு பேருந்தில் வந்துள்ளார். அடுத்து, மேட்டுப்பாளையம் வந்த அவர், அங்கிருந்து நீலகிரி மாவட்டம் மஞ்சூர் வந்துள்ளார். அங்கிருந்து பிக்கட்டி சென்றுள்ளார். முன்னதாக இவரை பர்லியார் செக் போஸ்டில் சோதனை செய்ததில் தற்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
ஆனால் கடந்த ஒரு வாரமாக அவர் ஊருக்குள் சகஜமாக நடமாடி இருக்கிறார். செக் போஸ்டில் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்ட போது அவரை தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அவர் அதை கடைபிடிக்கவில்லை. இதனால் தற்போது அவருடன் பிக்கட்டி பகுதியை தனிமைப்படுத்தி அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
