'முன்னாள் கிரிக்கெட் வீரரை கொன்ற மகன்...' 'போதையில அப்பா இறந்து போனதே தெரியல...' விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாரஞ்சி கோப்பையில் விளையாடிய முன்னாள் வீரர் கிரிக்கெட் வீரர் மது போதையில் தன் சொந்த மகனால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஞ்சி கோப்பைப் போட்டிகளில் விளையாடி புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முன்னாள் வீரர் ஜெயமோகன் தம்பி கேரளாவின் மணக்காடு பகுதியில் வசித்து வந்தார். ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து துணை மேலாளராக பணிபுரிந்த இவர் ஓய்வு பெற்ற நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன் இவரது மனைவி அனிதா காலமானார். இதன்காரணமாக மன உளைச்சலில் இருந்த ஜெயமோகன் அவரது மூத்த மகன் அஸ்வின் உடன் மது குடிக்க ஆரம்பித்துள்ளார்.
ஓட்டலில் செஃப்பாக பணிபுரிந்து வரும் அஸ்வின் பணத்தேவைக்காக தன் தந்தையையே நாடி இருந்துள்ளார். இந்நிலையில் மனைவியை பிரிந்ததும், மகனின் தற்போதைய நிலை குறித்தும் நினைத்து கவலையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை காலையில் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
போலீசார் விசாரணையில் அஸ்வின் ஜெயமோகனை வீட்டுக்குள் இழுத்து செல்லும் காட்சியை பார்த்ததாக பக்கத்து வீட்டு பெண் போலீசிடம் கூறியுள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீசார், அஸ்வின் தன் பணத் தேவைக்காக தன் தந்தையின் ஏ.டி.எம். கார்டை அஸ்வின் வைத்துள்ளார். அதனை திரும்ப கேட்ட தந்தையினை வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அஸ்வின் தனது தந்தையின் முகத்தில் குத்தியுள்ளார். அதனால் படுகாயம் அடைந்த ஜெயமோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குடிபோதையில் இருந்த அஸ்வினுக்கு தன் தந்தையே இறந்தது தெரியவில்லை. மேலும் அஸ்வினை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.