'ஆமாம்', வைரசின் 'வீரியம் அதிகரித்துள்ளது...' 'பாதுகாப்புடன் இருந்து கொள்ளுங்கள்...' அமைச்சர் 'விஜயபாஸ்கர்' எச்சரிக்கை...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரசின் வீரியம் அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸின் வீரியம் சற்று அதிகரித்துள்ளதால் மக்கள் பாதுகாப்பாக முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டார்.
வைரசின் வீரியத்தை குறைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றும், கொரோனா தொற்றால் குழந்தைகள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பிறந்த 3 நாள் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தியுள்ளோம். தமிழகம் முழுவதும் டாக்டர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணி பாராட்டுக்குரியது என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அறிகுறி இல்லாமல் கொரோனா உறுதி கொரோனா உறுதியானவர்களிடமிருந்து கூட நோய்த் தொற்று பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், "கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. 80 சதவீதம் பேருக்கு அறிகுறியே இல்லை. 20 சதவீதம் பேருக்கு கடுமையான உடல்வலி, காய்ச்சல் ஏற்படுகிறது. அவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆக்சிஜன் தேவைப்படும் நிலை அதிகமாக உள்ளது உண்மை. நோய் தொற்றை தடுக்க சுகாதார வழிகாட்டுதல்களின் படி நடவடிக்கை எடுத்துள்ளோம்." எனக் குறிப்பிட்டார்.
மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்தப்படுத்திக் கொள்பவர்களுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் என்ற கருவியை கொடுப்பதற்கான ஆலோசனையில் இருப்பதாகவும், அதறக்க 20 ஆயிரம் பல்ஸ் ஆக்சி மீட்டரை வாங்கி இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும். மீண்டும் கடுமையான ஊரடங்கு குறித்து மருத்துவ குழு பரிந்துரை பேரில் முதல்வர் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.