'ரோட்ல இறந்து கிடந்த மனிதரை...' 'தூக்கி குப்பைத் தொட்டியில போட்ட கொடூரம்...' 'பக்கத்துல தண்ணி இருந்தும் குடிக்கல...' உள்ளத்தை உலுக்கும் மனித நேயமற்ற செயல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாசாலையில் இறந்து கிடந்த ஒருவரை மாநகராட்சி ஊழியர்கள் குப்பை தொட்டியில் தூக்கி போட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லக்னோவிலிருந்து 160 கிமீ தொலைவில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த 42 வயதுடைய நபர் ஒருவர் நடந்து செல்லும் போது தீடீரென மயங்கி விழுந்துள்ளார். அந்த நிலையிலேயே அவர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரின் உடலை 4 மாநகராட்சி ஊழியர்கள் கட்டி குப்பை வண்டியின் பின்புறத்தில் குப்பை போல் தூக்கிப் போட்டு காவல்நிலையம் கொண்டு சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இறந்து போன மனிதர் பல்ராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவரின் பெயர் மொகமது அன்வர் என்றும் தெரியவந்துள்ளது. வேலைக்காக அரசு அலுவலகத்துக்குச் சென்ற போது மயங்கி விழுந்த மொகமது சம்பவ இடத்திலேயே இறந்தும் போய்விட்டார். இவரது உடலுக்கு அருகே தண்ணீர் பாட்டில் ஒன்று இருந்துள்ளது. ஆனால் அவர் குடிக்காமல் இறந்து போயுள்ளார்.
இதையடுத்து மொகமதுவின் உடலை தூக்கி எரிந்த 4 மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் இதனை வேடிக்கைப் பார்த்த 4 போலீசார் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சக மனிதரை ஈவு இரக்கம் இன்றி இறந்த உடலை தரைக்குறைவாக நடத்திய சம்பவம் அனைவரையும் கோபமடைய செய்துள்ளது.

மற்ற செய்திகள்
