'தொடரும் ஊரடங்கு'... 'ஜெகன்மோகனின் அடுத்த அதிரடி'... 'இத நாங்க எதிர்பாக்கவே இல்ல'... வியந்து போன மக்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவில் ஊரடங்கு தொடரும் நிலையில், சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள் மற்றும் தையல்காரர்களுக்கு முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ள உதவித்தொகை, அவர்களை நிம்மதி அடையச் செய்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது., இதனால் பொருளாதாரம் அடியோடு முடங்கியது. தொழில் நிறுவனங்கள் செயல்படாததால், தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆந்திராவிலும் இதே நிலை நீடிக்கும் நிலையில், அங்குப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள், தையல்காரர்கள் என மொத்தம் 2.47 லட்சம் பேருக்கு தலா 10000 ரூபாய் வழங்க ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதற்காக 247 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். இதன்மூலம் 82,347 சலவை தொழிலாளர்கள், 38,767 சலூன் கடைக்காரர்கள், 1,25,926 தையல்காரர்கள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் எதுவும் இல்லாமல் தவித்து வந்த எங்களுக்கு இந்த அறிவிப்பு மிகுந்த நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாகத் தொழிலாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்
