ஏப்ரல் 20-க்கு பின் 'வேலைக்கு' செல்வோர்... கண்டிப்பாக 'கடைபிடிக்க' வேண்டிய வழிமுறைகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் ஏப்ரல் 20-க்கு பின் அனைத்து விவசாய வேலைகள், தோட்ட தொழில்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் பணிக்கு செல்வோர் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. அந்த விதிமுறைகள் குறித்து கீழே காணலாம்:-
*அதிகம் பேர் கூடும் மீட்டிங் நடத்த கூடாது.
*பொது இடங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடக்கூடாது.
*மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி, திருமணம் , இறுதி சடங்கு நிகழ்வுகளில் ஒன்று கூடுவதை கடைபிடிக்க வேண்டும்.
*பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும்.
*மது விற்பது, குட்கா,புகையிலை பொருட்களை விற்பது தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புகையிலை மென்று துப்பினால் தண்டனை விதிக்கப்படும்.
*பணி இடங்களில், சானிடைசர், வெப்பம் கணக்கிடுதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.
*பணி இடங்களில் ஷிப்ட் மாறும் போது, ஒருமணி நேரம் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். உணவு சாப்பிடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
*65 வயதுக்கு மேற்பட்டோர், 5 வயதுகுட்பட்ட குழந்தைகளின் பெற்றோர், நோய் உடையோர் வீட்டில் இருந்த பணி செய்ய நிறுவனங்கள் அறிவுறுத்த வேண்டும்.
*ஆரோக்ய சேது ஆப்பை பயன்படுத்த அனைத்து ஊழியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்.
*ஒவ்வொரு ஷிப்ட் மாறும் போது, நிறுவனங்கள் பணி இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
*பொதுவெளியிலும், பணியிடங்களிலும் அனைவரும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
