கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில்... அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்ட செவிலியர்கள்!... பதறவைக்கும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றில் N95 முகக்கவசம் இல்லாமல் செவிலியர்களை வேலைப்பார்க்க நிர்பந்தம் செய்துள்ள அவலம் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
6 லட்சத்து 51 ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களும் பாதிக்கப்பட்டுள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், மருத்துவர்களின் முக்கிய பாதுகாப்பு கவசமான N95 மாஸ்க் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய பரிதாப நிலை அமெரிக்காவில் உள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள சான்டா மோனிகாவில் உள்ள செயின்ட் ஜான் சுகாதார மையத்தில் வேலைப்பார்த்து வந்த நர்ஸ் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்துபோன மற்ற நர்ஸ்கள் N95 மாஸ்க் இல்லாமல் வேலைப் பார்க்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே மருத்துவமனை நிர்வாகம் N95 மாஸ்க் தேவையில்லை எனச் சொல்லியிருக்கிறது. இந்நிலையில் வேலைக்கு செல்ல மருத்த செவிலியர்களை நிர்வாகம் சஸ்பெண்டு செய்து தேசிய செவிலியர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட நர்ஸ் கூறுகையில் "மருத்துவமனை மேனேஜர்கள் சிடிசி வழிமுறைகளை நாம் கடைபிடிக்கிறோம். அவர்கள் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தும் மாஸ்க் பயன்படுத்தினால் மோதும் என்று கூறினர்" என்றார்.