'சுழற்றி அடித்த கொரோனா, பட் பயப்படாதீங்க'... 'யாரையும் வீட்டுக்கு அனுப்ப மாட்டோம்' .... 'ஆனா இத எதிர்பாக்காதீங்க' ... டிசிஎஸ் அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 17, 2020 10:26 AM

கொரோனா தோற்று காரணமாக  ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்,  டிசிஎஸ் நிறுவனத்தின் நேர்மறை வளர்ச்சி பெருமளவில் பாதித்து இருப்பதாகவும், அதே நேரத்தில் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என, டிசிஎஸ் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.

TCS will not retrench any of its employees, but freezes salary hikes

நாட்டின் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சா்வீசஸ் (டிசிஎஸ்) மார்ச் காலாண்டில் ரூ.8,049 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது தொடர்பான விவரங்களை அதன் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் கோபிநாதன் வெளியிட்டார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ''கொரோனா தொற்று காரணமாக நடப்பு நிதி ஆண்டில் முதல் இரண்டு காலாண்டுகள் சற்று கடினமானதாக இருக்கும்.

மார்ச் காலாண்டில் ரூ.8,049 கோடியை நிகர லாபமாக ஈட்டிய போதிலும், இது, கடந்த 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.8,126 கோடியுடன் ஒப்பிடுகையில் சிறிய சரிவாகும். ஆனாலும் பணியாளர்கள் யாரையும் வேலையை விட்டு அனுப்பும் எண்ணம் இல்லை. அதே நேரத்தில் இந்த ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்பட மாட்டாது. அதே நேரத்தில் கல்லூரி நேர்காணலில் தேர்வான மாணவர்கள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள், என ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.