'டியூட்டி போலீஸாருக்கு உணவு வழங்கிய நபருக்கு கொரோனா உறுதி!'.. 'அதன்பிறகு தெரியவந்த மற்றுமொரு அதிர்ச்சி உண்மை!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை அருகே போலீஸாருக்கு உணவு வழங்கிய முதியவர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் துடியலூரில் கோத்தாரி நகரில் வசிக்கும் 61 வயதான நபருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று அவருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் வசிக்கக் கூடிய பகுதியினை சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தியதோடு, பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்றும் அறிவுறுத்திச் சென்றுள்ளனர்.
டெல்லிக்கு சென்று மார்ச் 23ம் தேதிதான் இந்த நபர் தமிழகம் திரும்பியுள்ளார். அதன் பின்னர் இவர் மேட்டுப்பாளையம் சாலையில் காவல் பணியில் இருந்த போலீஸாருக்கு உணவு வழங்கியதும், துடியலூர் அரசு மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று வந்ததும் தெரியவந்ததை அடுத்து, இவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்த நபருக்குதான் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவருடன் இருந்தவர்களும் சில காவலர்களும் தனிமைப்படுத்தப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
