11 நாட்களில் '92 ஆயிரம்' அழைப்புகள்... 'அந்த' வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை... 'ஜெட்' வேகத்தில் உயர்வு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Apr 17, 2020 12:53 AM

ஊரடங்கு நேரத்தில் ஆபாச வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை 200% உயர்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Lockdown: Pornography sites Viewers increased 200 Percent

சிறுவர் ஆபாச வீடியோக்களை பார்ப்பதில் தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாக கடந்த ஆண்டு தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அதுபோன்ற வீடியோக்களை பார்ப்பவர்கள், சமூக வலைதளங்கள் வழியாக பரப்புபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் தற்போது ஊரடங்கு நேரத்தில் மீண்டும் அதுபோன்ற வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சென்னை உள்பட 100 நகரங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ஒன்று மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் மற்றும் பெண்கள் ஆபாச வீடியோக்களை பார்ப்பது வெகுவாக அதிகரித்துள்ளது.

ஆபாச வீடியோ தளங்கள் தங்களது பெயர்களை அவ்வப்போது மாற்றி வீடியோக்களை வெளியிட ஆரம்பித்து இருக்கின்றன. இதனால் இளைஞர்கள் அதுபோன்ற வீடியோக்களை பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஊரடங்கு காலத்தில் ஆபாச வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 200% வரை உயர்ந்துள்ளது. மறுபுறம் ஊரடங்கால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான வன்முறைகள் அதிகரித்து உள்ளன.

உச்சக்கட்டமாக குழந்தைகள் குற்ற தடுப்பு மையத்துக்கு 11 நாட்களில் சுமார் 92 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. இது தொடர்பாக அனைத்து மாநில போலீசாரும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.