வாயடைத்து நிற்கும் உலக நாடுகள்!.. 35 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை!.. என்ன தான் நடக்கிறது அமெரிக்காவில்?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Apr 17, 2020 09:49 AM

அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 165 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

america single day death toll passes 4000 due to covid19

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தற்போதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் மனித பேரழிவு ஏற்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் 21 லட்சத்து 81 ஆயிரத்து 43 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 5 லட்சத்து 47 ஆயிரத்து 14 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு இதுவரை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 457 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அமெரிக்காவில் வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 6 லட்சத்து 77 ஆயிரத்து 482 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 29 ஆயிரத்து 479 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 165 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 608 ஆக அதிகரித்துள்ளது.