சிகிச்சையளிக்கும் 'டாக்டர்கள்', நர்ஸ்களுக்கு... கொரோனா 'பரவுவது' இப்படித்தானாம்... வெளியான 'புதிய' தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கொரோனா எப்படி பரவுகிறது என்பது குறித்து சீனாவில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஹூவ்சென்ஷான் மருத்துவமனை ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கொரோனா சீனாவில் உச்சத்தில் இருந்தபோது இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதன் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்:-
* வார்டுகளில் தீவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளிடம் இருந்து தும்மல் மூலமும், இருமல் மூலமும் வெளியேறும் நீர்த்துளிகள் தரையிலும் பரவுகிறது. அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள தட்டுகளிலும் அது படிகிறது.
* இந்த தட்டுகளை டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ உதவியாளர்கள் பயன்படுத்தும்போது பாதுகாப்பிற்காக கவச உடை அணிந்து இருப்பதால் கொரோனா வைரஸ் அவர்களின் உடலுக்குள் ஊடுருவ முடிவதில்லை.
* அதேநேரம், அவர்கள் அணிந்து இருக்கும் காலணிகளில் தரையில் படிந்துள்ள கொரோனா வைரஸ் எளிதில் ஒட்டிக்கொள்கிறது. இது, அவர்கள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பயணப்படுகிறது.
* மேலும் சிகிச்சையின்போது டாக்டர்கள், நர்சுகள் அணிந்து இருந்த 50 சதவீத காலணிகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, இந்த உண்மை கண்டறியப்பட்டது.
அதாவது, கொரோனா வைரசை சுமந்து செல்லும் சாதனங்களாக இவர்களது காலணிகள் செயல்பட்டு உள்ளன.
* கொரோனா பாதிப்பு காரணமாக நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு அறைகளின் தரையில் கிடந்த பஞ்சு திரட்டுகளில் இருந்து 94 சதவீதமும், பொதுவார்டு அறை ஒன்றின் தரையில் இருந்து எடுத்த பஞ்சுகளில் இருந்து 100 சதவீதமும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
* கொரோனா நோயாளிகள் தும்மும் போதும், இருமும் போதும் வெளியேறும் நீர்த்துளிகள் காற்றில் கலந்து வேகமாக பரவுகிறது. அது வார்டை விட்டு வெளியே செல்வதால் ஆஸ்பத்திரியின் பிற இடங்களுக்கும் எளிதில் பரவி விடுகிறது.
* இந்த நோய் தொற்று, ஹூவ்சென்ஷான் ஆஸ்பத்திரியின் கம்ப்யூட்டர் மவுஸ், கதவுகளின் கைப்பிடி, குப்பைதொட்டி போன்ற இடங்களிலும் ஒட்டிக்கொண்டு இருந்துள்ளது.
* இதில், ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நோயாளிகள் அனுமதிக்கப்படாத பகுதியான மருந்தகங்களிலும் கூட கொரோனா வைரஸ் பரவிய நிலையில் இருந்துள்ளது.