‘பணக்காரர்களை பாத்தாதான் பயமா இருக்கு’.. ‘அவங்கதான் வெளிநாடு போய்ட்டு வந்து நோயை இறக்குமதி செய்றாங்க’.. முதல்வர் பழனிசாமி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவை பணக்காரர்கள்தான் இறக்குமதி செய்தார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ரேபிட் பரிசோதனை கருவிகள் விரைவில் தமிழகம் வரும் என்று தெரிவித்தார்.மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக தெரிவித்த முதல்வர், இன்னும் 4 அல்லது 5 நாட்களில் கொரோனா தொற்று இல்லை என்ற நிலை ஏற்படும் என நம்பப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ‘இதெல்லாம் பணக்காரர்களால் வந்த நோய்தான். வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருந்து இறக்கப்பட்ட நோய்தான். ஏழைகளுக்கு நோயே கிடையாது. ஏழைகள் கிட்ட தாராளமாக பேசலாம். பணக்காரர்களை பார்த்தால்தான் பயமாக இருக்கிறது. ஏனென்றால் வெளிநாடுகளுக்கு சென்று வந்த நோயை இறக்குமதி செய்கின்றனர்’ என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் வரும் 20ம் தேதிக்கு பின் எந்தெந்த தொழில்களுக்கு அனுமதி வழங்கலாம் என்பது குறித்து நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
பணக்காரர்கள் தான் கொரோனாவை இறக்குமதி செய்தார்கள் - முதல்வர் பழனிசாமிhttps://t.co/AEl7sj1VKw#Coronavirus #EdappadiKPalaniswami #TamilNadu #CoronaLockdown #COVID19 #StayHome
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 16, 2020
