‘ஓனர் செய்த வேலையால்’... ‘பிஎம்டபிள்யூ காருக்குள் பரிதவித்த நாய்’... 'போலீஸ் செய்த அதிரடி'!!
முகப்பு > செய்திகள் > உலகம்By Sangeetha | Jul 30, 2019 12:07 PM
விலை உயர்ந்த காரின் உள்ளே நாயை பூட்டிவைத்துவிட்டு, உரிமையாளர் சென்றநிலையில், கடுமையான வெப்பத்தில் சிக்கி நாய் ஒன்று உயிருக்குப் போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் எஸ்ஸக்ஸ் என்ற இடத்தில் பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 காரில் வந்த நபர் ஒருவர், தனது நாயை காரின் உள்ளே வைத்து பூட்டி விட்டு, அருகாமையில் உள்ள கடைக்குச் சென்றார். சிறிது நேரத்தில் நாயை அழைத்து வந்ததை மறந்த அவர், தொடர்ந்து ஷாப்பிங் பண்ணுவதில் மும்முரமாக இருந்தார். இந்நிலையில் காரின் கண்ணாடிகள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்த நிலையில், உள்ளே இருந்த நாய்க்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்குப் போராடியது.
அங்கு ஏற்கனவே கடுமையான வெப்பம் நிலவி வரும்நிலையில் இதனைப் பார்த்துக்கொண்டிருந்த வழிப்போக்கர்கள் பதறிப்போயினர். பின்னர் அவர்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த போலீசார். உரிமையாளர் யார் என்று தெரியாதநிலையில் விலையுயர்ந்த பிஎம்டபிள்யு காரின் கண்ணாடியை உடைக்க முயற்சி செய்தனர். பின்னர் சுத்தியலால் கண்ணாடியை உடைத்து அதிரடியாக நாயை மீட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Someone left a dog in car in Southend on sea Never leave your dog alone in a car. #southendonsea #London pic.twitter.com/iL6hhgrEsh
— London Knife Crime LDN (@CrimeLdn) July 28, 2019