இரு தரப்பினர் 'மோதலில்' 20 பேர் காயம்... 'வானத்தை' நோக்கி துப்பாக்கிச்சூடு... தொடர் பதற்றத்தால் போலீசார் குவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இரு தரப்பினர் மோதலில் 20 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே போசம்பட்டியைச் சேர்ந்த பரமசிவம் மற்றும் உடையப்பன் தரப்பினருக்கிடையே உள்ளாட்சித் தேர்தல் காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் பரமசிவத்தின் ஆதரவாளர் ஒருவர் உடையப்பன் குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு உடையப்பன் தரப்பினரும் அவதூறு பரப்பி உள்ளனர்.
இதனால் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் கற்கள், அரிவாளால் கடுமையாக மோதிக்கொண்டு உள்ளனர். இதில் பரமசிவம் ஆதரவாளர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் இரண்டு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டு உள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் இரு தரப்பினர் மத்தியில் சமாதான முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
ஆனால் இரண்டு தரப்பினரும் கேட்கவில்லை. சமாதான முயற்சி தோல்வியடைய எஸ்.ஐ சரவணன் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டுள்ளார். இதையடுத்து இரண்டு தரப்பினரும் கலைந்து சென்றுள்ளனர். இரண்டு தரப்பிலும் 25 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இரண்டு தரப்பிலும் 20 பேர் வரை காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
