பாலியல் வன்கொடுமை மற்றும் 'கொலை' மிரட்டல்களால் ... 'போலீஸ்'க்கு போன நடிகை!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

கடந்த மாதம் ஜூன் 14-ம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் இயற்கையானது அல்ல என தெரிவிக்கும் ரசிகர்கள் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். இதுவரை 30-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியும் கூட அவரின் தற்கொலைக்கான காரணம் என்னவென்பதை போலீசாரால் கண்டறிய முடியவில்லை.
இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தி இன்ஸ்டாகிராமில் இருவர் தனக்கு கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவாய் என மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து அந்த இருவர் மீதும் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இதுதொடர்பான ஸ்க்ரீன்ஷாட்களை ரியா பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
