அதிகாலை கேட்ட 'அலறல்' சத்தம்... பெத்த 'பொண்ணு'ன்னு கூட பாக்கலயே... ஓடிவந்த அக்கம் பக்கத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிகாலையில் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கொரோனா ஊரடங்கில் வன்முறைகள் குடும்ப வன்முறைகள் பெருக ஆரம்பித்து இருக்கின்றன. அந்த வகையில் தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த வங்கி ஊழியர் கோயிலுக்கு செல்ல பணம் கொடுக்கவில்லை என மனைவியை கொல்ல முயன்ற சம்பவம் அதிர வைத்துள்ளது.
தனியார் வங்கி ஊழியரான சீனிவாசன்(39) அவரின்மனைவி விஜயலட்சுமி(37) மற்றும் குழந்தைகளுடன் சிட்லபாக்கம் அடுத்த அபார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வந்துள்ளார். சமீபகாலமாக சீனிவாசன் யோகா செய்வது, கோயில், குளங்கள் என வாழ்க்கையை கழித்து வந்துள்ளார். சம்பவ தினமான நேற்று அதிகாலை கோயிலுக்கு செல்ல வேண்டும் என சீனிவாசன் மனைவியிடம் பணம் கேட்டுள்ளார்.
பணம் கொடுக்க விஜயலட்சுமி மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன் காய்கறி நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியை குத்தியுள்ளார். சத்தம் கேட்டு கண்விழித்த மகள் நேத்ரா(13) அம்மாவை காப்பாற்ற முயல அவருக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழ, சீனிவாசன் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார்.
இருவரின் அலறல் சத்தம் கேட்டு கண்விழித்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சீனிவாசனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.