“எனக்கு அது வேணும்.. அந்த ரூம திறக்க போறியா இல்லயா?”.. 'மருத்துவமனை' பணியாளருக்கு 'கத்திமுனையில்' நேர்ந்த 'பயங்கரம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரிட்டனில் மருத்துவமனையில் வைத்து சுகாதார சேவைப் பணியாளரை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கத்தியால் குத்தியதற்கான காரணம் மேலும் அதிரவைத்துள்ளது.
பிரிட்டனில் உள்ள ராயல் சசெக்ஸ் கவுண்டி மருத்துவமனையில் உணவு தயாரிக்கும் பிரிவில் பணிபுரிந்து வருபவர் 56 வயதான ஜோசப் ஜார்ஜ். இவரை கத்தியால் குத்திய வழக்கில்தான் 30 வயதான கோனோலி மெலன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இசை நிகழ்ச்சிகளை முன்னெடுக்கும் நிறுவனத்தில் பணியாற்றுபவர்.
விசாரணையில், அறுவை சிகிச்சையின்போது போதைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை வைத்து பாதுகாக்கும் அறையினை ஜார்ஜின் அடையாள அட்டையை பயன்பத்தி திறக்குமாறு கத்தி முனையில் வைத்து கோனோலி மெலன் மிரட்டியதும், அதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என கெஞ்சிய ஜார்ஜினை கோனோலி கத்தியால் 5 முறை குத்தியதும் தெரியவந்தது.
இந்நிலையில், கை, உதடு, தொண்டை மற்றும் உடலின் உள் பகுதிகளில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜார்ஜ் தற்போது டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். அதன் பின்னரே இந்த சம்பவம் பற்றி முழுமையாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கோனோலி மெலன் ஆயுதப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.