'என் பொண்ணுக்கு'... எவ்ளோ 'கொடுமை' நடந்து இருக்கு... 'மருத்துவ மாணவி' வழக்கில் அதிரடி திருப்பம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | May 29, 2019 11:39 AM
மருத்துவ மாணவி தற்கொலை விவகாரத்தில் அதிரடி திருப்பமாக,மூன்று சீனியர் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாயல் தத்வி என்ற ஆதிவாசி பழங்குடியின வகுப்பை மாணவி,மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.பாயல் மருத்துவமனையில் சேர்ந்ததிலிருந்து சீனியர் மருத்துவர்கள்,அவரை சாதி ரீதியா துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.இது குறித்து தனது பெற்றோர் மற்றும் கணவரிடம் கூறியுள்ளார். அவர்கள் பாயலிற்கு ஆறுதல் கூறியுள்ளனர்.இதனிடையே ரேகிங் கொடுமை அதிகமாக பாயல் தற்கொலை செய்து கொண்டார்.இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாயல் தத்வியை ரேகிங் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட மூன்று சீனியர் மருத்துவர்களும் அவரின் தற்கொலைக்கு பின்பு தலைமறைவாயினர். இதனிடையே தலைமறைவான 3 மருத்துவர்களும் மகாராஷ்டிரா மருத்துவர்கள் சங்கத்திற்கு ஒரு கடிதத்தை எழுதியிருந்தனர்.அதில் ‘அதிக பணிக்கு ரேகிங் என்று பெயர் வைத்தால் நாங்கள் அனைவரும் ரேகிங்கிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனிடையே குற்றசாட்டிற்கு உள்ளான மருத்துவர்கள் ஹேமா அஹுஜா, அங்கிட்டா காண்டெல்வால், பக்தி மேக்ஹே ஆகிய மூவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
தற்கொலை செய்துகொண்ட பாயலின் தயார் மற்றும் கணவர் கூறும்போது ''எஸ்டி இடஒதுக்கீட்டு முறையில் மருத்துவம் படிக்க சென்ற பாயல் தத்வியை,சீனியர் மருத்துவர்கள் பலரும் சாதியை குறிப்பிட்டு பேசியுள்ளனர்.பாயலின் படிப்பு மற்றும் அறிவு குறித்தும் மிகவும் கிண்டலாக பேசியுள்ளார்கள்.நடந்த சம்பவங்கள் குறித்து உயர் அதிகாரிகளிடம் பாயல் புகார் அளித்தும்,எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனையுடன் குறிப்பிட்டார்.
இதனிடையே காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. பாயல் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு, முன்பு,சீனியர் மருத்துவர்கள் நோயாளிகள் முன்பு பாயலை அவமானப்படுத்தியுள்ளனர்.அதன் பின்பு அந்த இடத்தை விட்டு சென்ற அவர், தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.இதற்கிடையே காவல்துறையினரின் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.