‘அம்மாவுக்கு ரொம்ப பிடிச்ச நெக்லஸ்’... ‘வீட்டில் தனியாக இருந்த’... ‘11 வயது சிறுவனின் துணிகர செயல்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Aug 22, 2019 12:37 PM

11 வயது சிறுவனின் துணிச்சலால், தனது அம்மாவின் நெக்லஸை திருடியவன் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11 year old fights thief, retrieves mother’s Rs 55, 000 necklace

மும்பை அருகிலுள்ள விரார் பகுதியில், தபோவன் அடுக்குமாடி கட்டிடத்தின் 3-வது மாடியில் வசித்து வருபவர்கள் பிரபாகர் - திவ்யா தம்பதியினர். இவர்களது 11 வயதான மகன் தனிஷ் மகதிக், அருகில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த செவ்வாய்கிழமை, பிரபாகர் அலுவலகத்துக்கு சென்றுவிட, அவரது மனைவி திவ்யா தனது மகளுடைய பள்ளிக்கு சென்றிருந்தார். தனிஷ் மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்திருந்தான். அப்போது அங்கு வந்த ஒருவர், தன்னை எலெக்ட்ரிஷியன் என்றும், வீட்டில் ஒயரை சோதனை செய்ய வேண்டும் என்றும் சொல்லியுள்ளார்.

அதற்கு சிறுவன் தனிஷ், அம்மா வீட்டில் இல்லை, பிறகு வாருங்கள் என்று கூறியுள்ளான். அதைப் பொருட்படுத்தாத அவர், சிறுவனை ரூமில் தள்ளி கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். மேலும் வீட்டில் இருந்த ஒன்றேகால் லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது பாக்கெட்டை கவனித்த சிறுவன், தனது அம்மாவுக்கு பிடித்தமான 55 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நெக்லஸை திருடி வைத்திருந்ததைக் கண்டான். திருடன் நகைகளை எடுத்துக்கொண்டு தப்பியோடினார்.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட சிறுவன், திருடனை பிடிக்க முயன்று முடியாததால், திருடன், திருடன் என்று கத்தியுள்ளான். அப்போது, சிறுவனின் தாய் குடியிருப்பின் மாடியில் ஏறிக் கொண்டிருந்தவர், மகனின் கத்தலைக் கேட்டு, திருடனை பிடிக்க முயன்றார். ஆனால் அவரை தள்ளிவிட்டு ஓடினான் திருடன். தொடர்ந்து சிறுவன் கத்தியதால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து திருடனை பிடித்தனர். பின்னர் அவனை கையை கட்டி, சரமாரியாகி தாக்கியதுடன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீசார், திருடனை கைதுசெய்து விசாரித்தனர்.

அப்போது, அந்த திருடன் 52 வயதான அப்துல்கான் என்பதும், அவன்மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. திருடனைப் பிடிக்க துணிச்சலுடன் செயல்பட்ட சிறுவன் தனிஷ் கூறும்போது, ‘அந்த நெக்லஸ் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமானது. அதை திருடன் திருடிச் சென்றுவிடாமல் தடுக்க நினைத்து போராடினேன். நல்லவேளை அந்த திருடன் என்னை அடிக்கவில்லை’ என்றான். அந்த சிறுவனின் துணிச்சலை போலீசாரும் அக்கம்பக்கத்தினரும் பாராட்டினர்.

Tags : #CHILD #NECKLACE