'களமிறங்க மறுத்து போராட்டம் நடத்திய’... ‘யுவராஜ் தலைமையிலான அணி’... 'குளோபல் டி20-யில் நிலவிய குழப்பம்'???

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Aug 08, 2019 04:39 PM

யுவராஜ் தலைமையிலான டொரான்டோ நேஷனல்ஸ் மற்றும் மான்ட்ரீல் டைகர்ஸ் அணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Yuvraj led Toronto Nationals start delayed due to payment issue

குளோபல் டி20 போட்டிகள் தற்போது கனடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் யுவராஜ் தலைமையிலான டொரான்டோ நேஷனல்ஸ் மற்றும் ஜார்ஜ் பெய்லி தலைமையிலான மான்ட்ரீல் டைகர்ஸ் அணிகள், கடந்த புதன் கிழமையன்று மோதின. ஆனால் இந்த இரு அணிகளும் போட்டிக்கு முன்பாக, தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்களிலிருந்து, போட்டி நடக்கும் பிராம்டனிலுள்ள சிஏஏ மையத்திற்கு, பேருந்தில் ஏற மறுத்து போராட்டம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்களுக்கு வரவேண்டிய நிலுவை சம்பளம் வராததாலே, போராட்டத்தில் வீரர்கள் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் டொரான்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டன் யுவராஜ் சிங் என்பதால், இந்தப் பிரச்சினை மேலும் பரவலானது. யுவராஜ் அணி இந்தப் போட்டியில் வென்றால்தான் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும். ஆனால் வீரர்களுக்கு உரிய தொகை போய்ச் சேர வேண்டும் என்பதில் யுவராஜ் சிங், அணியை களமிறக்க விருப்பமில்லாதவராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த இரு அணிகள் மட்டும் அல்லாது, மற்ற அணி வீரர்களும், தங்கள் அணி உரிமையாளர்களிடம் நிலுவை சம்பளம் வழங்கப்படவில்லை எனில், பிளே ஆஃப் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று எதிர்ப்பு காட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள், போட்டித் துவங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு தொழில்நுட்பக் காரணம் என்று மட்டுமே தெரிவித்தனர். எனினும் 2 மணி நேரம் தாமதமாக துவங்கிய ஆட்டத்தில், யுவராஜ் தலைமையிலான டொரான்டோ நேஷனல்ஸ் அணி வெற்றிபெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

Tags : #YUVRAJSINGH #CANADA #GLOBAL #T20