‘எதிரணி வீரரை கலாய்த்த யுவராஜ் சிங்’... வைரலான வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 30, 2019 01:56 PM

எதிரணி வீரரை பேட்டி எடுத்துக் கொண்டு இருக்கையில் நடுவில் புகுந்து, யுவராஜ் சிங் கலாய்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Yuvraj singh crashes Ben Cutting\'s interview with fiance

குளோபல் டி20 கிரிக்கெட் தொடர் கனடாவில் தற்போது நடைப்பெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங், டொராண்டோ இன்டர்நேஷனல் அணிக்காக ஆடி வருகிறார். அதில் முதல் போட்டியில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு 2-வது போட்டியில் அதிரடியாக ஆடி அசத்தினார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று நடந்தப் போட்டிக்கு முன்பு, எதிரணி வீரரான பென் கட்டிங், பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது இடையே புகுந்த யுவராஜ் சிங், ‘எப்போது நீங்கள் கல்யாணம் செய்யப் போகிறீர்கள். நேரமாகிறது சீக்கிரம் கல்யாணத்துக்கு தயாராகுங்கள்’ என்று கூறினார். இதையடுத்து பென் கட்டிங்கும், பேட்டியாளரும் சிரித்துவிட்டனர். பென் கட்டிங்கை பேட்டியடுத்த எரின் ஹோலண்ட் வேறு யாருமல்ல. அவரின் காதலியும், வருங்கால மனைவியுமாவார்.

4 வருடங்களாக காதலித்து வந்த அவர்கள், கடந்த மே மாதம்  நிச்சயம் செய்துக்கொண்டனர். இதையடுத்தே யுவராஜ் சிங் அவ்வாறு கேட்டுள்ளார். யுவராஜின் இந்தக் கேள்விக்கு, ‘கண்டிப்பாக எனது திருமணத்திற்கு உங்களை அழைப்பேன். கவலை வேண்டாம்’ என்று ட்விட்டரில் எரின் ஹோலண்ட் பதிவிட்டுள்ளார். யுவராஜின் இந்த குறும்புத்தனம் தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #YUVRAJSINGH #CANADA #BENCUTTING #ERICHOLLAND