‘இது போதுமே இனி நம்ம பயலுகல கையில பிடிக்க முடியாதே’.. ‘மீண்டும் களமிறங்கும் யுவராஜ் சிங்’.. வெளியான அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jun 21, 2019 12:44 PM
இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய அணியின் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 58 டி20 போட்டி, 304 ஒருநாள் மற்றும் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கடந்த 2007 -ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல யுவராஜ் சிங்கின் பங்கு மிக முக்கியமாக அமைந்தது. அந்த தொடரில் சிறப்பாக விளையாடி யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சில காலம் கிரிக்கெட்டில் இருந்து அவர் விலகியிருந்தார். சிகிச்சை முடிந்து அணிக்கு திரும்பியதும் யுவராஜ் சிங்கால் தனது பழைய ஆட்டத்தை தொடர முடியவில்லை. இதனால் இந்திய அணியில் இருந்து யுவராஜ் சிங் ஓரம் கட்டப்பட்டார்.
இதனை அடுத்து ஐபிஎல் தொடர்களில் விளையாடிவந்த யுவராஜ் சிங் திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே வெளிநாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளில் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும், அதற்கு அனுமதி வேண்டும் என சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐக்கு யுவராஜ் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் கனடாவில் நடைபெற உள்ள க்ளோபல் டி20 போட்டியில் யுவராஜ் விளையாட உள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகிற ஜூலை 25 -ம் தேதி முதல் ஆகஸ்ட் 11 -ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில், டோரண்டோ நேசனல்ஸ் அணியின் சார்பாக யுவராஜ் சிங் விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
