'ஒரு மனுஷன்.. வலியில துடிக்கும்போது.. இப்படியா ரியாக்ட் பண்ணுவீங்க'.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. பரவும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Aug 19, 2019 01:13 PM
இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 258 ரன்கள் அடித்தது.

ஆனாலும் அபாரமாக ஆடி, இங்கிலாந்தை திணறடித்த ஸ்மித் 92 ரன்களை எடுத்து, இறுதியில் வோக்ஸின் பந்தில் அவுட் ஆகினார். 8 ரன்கள் வித்தியாசத்தில் சதத்தை நழுவவிட்டாலும், ஸ்மித் 7 முறை 50-க்கும் மேல் ரன்களை குவித்த வீரர் என்கிற பெருமையை பெற்றும், 6 முறை தொடர்ந்து 50 ரன்களுக்கு மேல் எடுத்த மைக் ஹசியின் சாதனையையும் முறியடித்தும் சாதனை படைத்தார்.
இந்த ஆட்டத்தின்போது, ஸ்மித்தை நிலைகுலைக்க முடியாமல் இங்கிலாந்து அணி இருந்தபோது, 77வது ஓவரில் ஆர்ச்சர் ஒரு பந்தை ஸ்மித்தின் தலைக்கு மேல் பவுன்சராக எறிந்தார். அதை அட்டன் செய்ய முயற்சி பண்ணிய ஸ்மித்தின் பின்கழுத்தில் பந்து வந்து அடித்தது. ஸ்மித் அதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
அப்போது பிசியோ தெரபி நிபுணர் வந்து அவரை பரிசோதனை செய்துகொண்டிருந்தார். அப்போது ஆர்ச்சரும் பட்லரும் ஏதேதோ பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தது பரவியது. ஒருவர் வலியால் துடித்துக்கொண்டிருந்தபோது இப்படியா பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டு இருப்பார்கள், என்று ஆர்ச்சர் மற்றும் பட்லர் மீது விமர்சனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.
See this archer and Butler are laughing seeing steve smith in pain #ENGvAUS pic.twitter.com/d5JgrQX0oJ
— AO (@AO3100) August 17, 2019
