'யெஸ்.'..' ஃபியூச்சர்ல இவர்தான் சரிபட்டு வருவாரு..'.. 'ஒரு வழியா புடிச்சுட்டோம்'.. யுவ்ராஜ் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jul 03, 2019 10:45 AM

உலகக்கோப்பை லீக் போட்டிகளில் இந்திய அணி பல்வேறு விதமான ஆட்டங்களையும் சந்தித்து, புதுப்புது அனுபவங்களை சம்பாதித்து வருகிறது.

finally we found our no 4 batsman,Yuvraj Over Pant

இங்கிலாந்துடனான ஆட்டத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி, அதன் பின் பங்களாதேஷூடன் மோதியது. தொடர்ந்து பரபரப்பையும், எதிர்பாராத அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவிற்கு முக்கியமான காலக்கட்டம்.

கடைசிப் போட்டிகளில், 4வது ஆர்டரில் களமிறக்கப்படப் போவது யார் என்கிற பேச்சு எழுந்தபோது, விஜய் சங்கருக்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறக்கப்பட்டார். ஆனால் 21 வயதான ரிஷப் பந்துக்கோ, இதுதான் முதல் உலகக் கோப்பை போட்டி என்பதால் பலரும் ரிஷப் பந்திடம் இருந்து ரொம்பவே எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் ஆட்டத்தின் சூழலைப் புரிந்துகொண்டு, சிரித்துக்கொண்டே விளையாடும் ரிஷப் பந்துக்கு பலரும் ரசிகர்களாகிவிட்டனர். இந்த நிலையில்தான், யுவ்ராஜ் சிங் தனது ட்விட்டரில், ‘ஒரு வழியாக, 4வது ஆர்டரில் இறக்கப்படுவதற்கான பேட்ஸ்மேனை நாம் கண்டடைந்துவிட்டோம். இவரை சரியாக வார்த்தெடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #ICCWORLDCUP #RISHABPANT #YUVRAJSINGH