'பேட்டிங், பீல்டிங்கில் மரண மாஸ் காட்டிய யுவராஜ் சிங்'... வைரலான வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Aug 05, 2019 12:10 PM

குளோபல் டி20 தொடரில், பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் யுவராஜ் சிங் அசத்தி வருவது, அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Yuvraj Singh smashes 5 sixes in unbelievable knock

குளோபல் டி20 கிரிக்கெட் தொடர், தற்போது கனடாவில் நடைப்பெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங், டொரான்டோ நேஷனல்ஸ் அணிக்கு, கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கடந்த சனிக்கிழமையன்று டொரான்டோ நேஷனல்ஸ்  - ப்ராம்ப்டன் வுல்வ்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டொரன்டோ அணியின் கேப்டனான யுவராஜ் சிங், சிக்சர்களை பறக்கவிட்டு, 22 பந்துகளில் 51 ரன்கள் விளாசி அதிரடி காட்டினார்.

அதன் பிறகு அணியில், அவர் பிடித்த கேட்ச் ஒன்று, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரான லெண்டில் சிமன்ஸ் அடித்த பந்தை, யுவராஜ் சிங் அசத்தலாக கேட்ச் பிடித்தார். இந்த கேட்ச் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் யுவராஜ் சிங் 51 ரன்கள், 1 விக்கெட், 2 கேட்ச்கள் பிடித்து அசத்தினார். 38 வயதில் இது போன்ற ஒரு கேட்சை, டைவ் அடித்து பிடித்த யுவராஜ் சிங்கை, ரசிகர்கள் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.

Tags : #CANADA #YUVRAJSINGH #T20 #GLOBAL #SIXER