'கத்தி குத்தில்' முடிந்த 'தண்ணீர் சண்டை'... சென்னையில் 'பெண்ணிற்கு நேர்ந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jun 14, 2019 12:15 PM

தண்ணீர் பிரச்சனையால் ஏற்பட்ட தகராறில்,சபாநாயகர் தனபாலின் ஓட்டுநர் பெண்ணை கத்தியால் கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Speaker driver attacked a woman for water issues

சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் சுபாசினி.இவர் அனகாபுத்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு தண்ணீர் தீர்ந்து விட,அவரது கணவர் மோகன் தண்ணீருக்காக மோட்டர் போட்டுள்ளார்.அப்போது அதே குடியிருப்பில் வசிக்கும் ஆதிமூல ராமகிருஷ்ணன் என்பவர் 'சம்பில் தண்ணீரே இல்லை,அப்போ எதுக்கு மோட்டர் போடுறீங்க' என சத்தம் போட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட மோகனை,ஆதிமூல ராமகிருஷ்ணன் எட்டி உதைத்துள்ளார்.இதனை சற்றும் எதிர்பாராத மோகனின் மனைவி ராமகிருஷ்ணனை தட்டி கேட்டுள்ளார்.ஆனால் அவரையும் அடித்த அவர்,கத்தியால் சுபாசினியின் வாய் தாடையை கிழித்துள்ளார்.இதில் காயமடைந்த அவர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.அங்கு அவருக்கு 6 தையல் போடப்பட்டது.

இது தொடர்பாக காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரில்,ஆதிமூல ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.அவர் சபாநாயகர் தனபாலிடம் ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #WATER #CHENNAI #TN SPEAKER