'வலி விரல்களில்.. ரணம் நெஞ்சினில்'.. பயிற்சி மைதானத்தில் இந்திய வீரரின் உருக்கமான வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jun 12, 2019 06:18 PM

இந்தியா- நியூஸிலாந்து மோதிக்கொள்வதற்கான உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு நிகழ்ந்த பயிற்சி ஆட்ட மைதானத்தில் ஷிகர் தவான் இறுக்கத்துடன் இருக்கும் வீடியோ உருக வைத்துள்ளது.

Watch Video: Shikhar Dhawan at India\'s practice session at Trent Bridg

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை போட்டியின் போது, இந்திய வீரர் ஷிகர் தவானுக்கு கைவிரலில் ஏற்பட்ட முறிவு காரணமாக அடுத்த சில வாரங்கள் அவரை விளையாட்டில் இருந்து விலக்குவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா மோதுவதற்கான பயிற்சி ஆட்டம் நோட்டிங்ஹாம் ட்ரெண்ட் பிரிட்ஜில் நடந்து வரும்பொழுது, அந்த மைதானத்தில், வலிகளுடனும் ரணங்களுடனும் ஷிகர் தவான் நடந்து செல்லும் காட்சிகள், மனதை உருக்க வைக்கின்றன.

அதே சமயம்,காயமடைந்த தொடக்க வீரர் ஷிகர் தவானை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவர் காயத்தில் இருந்து மீள்வதற்கு சுமார் 10 முதல் 12 நாட்களாவது தேவைப்படும் என்று  இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #ICCWORLDCUP #SHIKHAR DHAWAN #ICCCRICKETWORLDCUP2019