‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’.. ரிஷப், அம்பட்டி ராயுடு இல்லாமல் புதிதாக ஒரு வீரர்!.. கேதர் ஜாதவிற்கு பதில் விளையாட வாய்ப்பா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 16, 2019 05:04 PM

கேதர் ஜாதவ் காயம் அடைந்துள்ளதால் அடுத்து அவருக்கு பதிலாக விளையாட போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

World cup 2019: Axar Patel possible replacements for Kedar Jadhav

இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பைக்கு பல்வேறு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில், இந்திய வீரர்கள் உலகக்கோப்பைக்கான பயிற்சியை மேற்கொள்ள இருகின்றனர்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் சார்பாக விளையாடிய கேதர் ஜாதவிற்கு ஃபீல்டிங் செய்யும் போது எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அப்போது ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். தற்போது சிகிச்சை பெற்று வரும் கேதர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வாகி இருக்கிறார். இதனால் அவர் உலகக்கோப்பையில் விளையாடுவதும் சந்தேகமாகியுள்ளது. கேதர் ஜாதவிற்கு பதிலாக அக்ஸர் பட்டேல் அல்லது அம்பட்டி ராயுடு விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி , ‘கேதர் ஜாதவிற்கு எலும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லை. அவரின் உடல்தகுதி குறித்து சோதிக்க இன்னும் நிறை நேரம் உள்ளது. உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அந்தந்த சமயத்தில் எடுக்கும் முடிவு மிகவும் முக்கியமானதாகும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #BCCI #KEDARJADHAV #AXARPATEL #AMBATIRAYUDU