“சுங்க வரி கேட்டது ஒரு குத்தமா”!.. ‘வரி கேட்டவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்பித்த நபர்’!.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Arunachalam | May 16, 2019 04:19 PM
ஹரியானா மாநிலத்தில் கார் பந்தய வீரர் ஒருவர் துப்பாக்கி முனையில், சுங்கச் சாவடி கடந்த காட்சி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே உள்ள சுங்கச் சாவடியில் கார் பந்தய வீரர் ஒருவர் தனது காரை வேகமாக வந்து சுங்கச் சாவடியில் வழக்கம் போல் நிறுத்தினார். அப்போது, காருக்குள் இருந்த மற்றொரு நபர், வந்து காரின் ஓட்டுநர் இருக்கையில் வந்து அமர மற்றொரு நபர் காரை விட்டு கீழே இறங்கி வரிகேட்ட நபரிடம் துப்பாக்கியை எடுத்து காட்டி மிரட்டினார்.
இதைத் தொடர்ந்து சுங்க கட்டண தடுப்பு திறக்கப்பட்டது. அங்கிருந்து அந்தக் கார் வேகமாக புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் சாலையில் சுங்கம் வசூல் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH Haryana: A man brandished a pistol at a toll plaza in Gurugram and fled without paying toll tax. Police have registered a case (15.5.19) pic.twitter.com/mhcsdxXmCu
— ANI (@ANI) May 16, 2019
