“புதிய அவதாரம் எடுக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னன்”!... விண்டீஸ் அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெய்ல்க்கு முக்கிய பொறுப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Arunachalam | May 07, 2019 10:22 AM

உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெய்ல்க்கு அந்த அணியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

west indies cricket council announces gayle as a vice captain for WC

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வரும் 30 ஆம் தேதி தொடங்கி ஜூலை 14 ஆம் தேதி வரை நடைப்பெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதில், விண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் மற்றும் மூத்த வீரர் கிறிஸ் கெய்ல்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டனாக அந்த அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெய்ல் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை நேற்று (06/05/2019) இரவு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதுபற்றி கெய்ல் கூறும்போது, “வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவது எப்போதும் எனக்கு பெருமை. மேலும், இது எனக்கு 5 வது உலக கோப்பை இந்த தொடர் எனக்கு ஸ்பெஷலானது. இந்நிலையில், அணியின் மூத்த வீரராக, கேப்டன் உள்ளிட்ட வீரர்களுக்கு உதவும் முக்கிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #WEST INDIES #VICE CAPTAIN #CHRIS GAYLE