'தோனிக்கும் கோலிக்கும் வித்தியாசம் இதுதான்'... 'கேப்டன்ஷிப் குறித்து பிரபல வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | May 16, 2019 01:52 PM
கேப்டன்ஷிப்பில் கோலிக்கும், தோனிக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம் குறித்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் வரும் மே 30-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் கோலி தலைமையிலான இந்திய அணி ஜூன் 5 -ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து விளையாட உள்ளது.
இந்திய அணி குறித்தும், வீரர்கள் குறித்தும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர். அதில் கேப்டன் கோலியின் கேப்டன்ஷிப் தான் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஐ.பி.எல். தொடருக்குப் பின்பு கோலியின் கேப்டன்ஷிப் குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ், கேப்டன் பொறுப்பில் கோலிக்கும், தோனிக்கும் உள்ள வேற்றுமைகள் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். 'தோனி எந்த ஒரு சூழலிலும் யோசித்து நிதானமாக முடிவெடுக்க கூடியவர். மனக்கட்டுபாட்டுடன் வீரர்களின் தகுதிகேற்ப முடிவெடுக்க கூடியவர். போட்டியில் நுணுக்கமாக முடிவெடுக்க கூடிய திறமை வாய்ந்த வீரர். ஆனால் விராட் கோலி போட்டியில் மிகவும் ஆக்ரேஷமாக இருப்பார். மேலும் போட்டியில் தனது முத்திரையை அவர் திணிக்க பார்ப்பார்' என்று ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.
மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்த போது டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராஃபி மற்றும் உலகக்கோப்பை தொடர்களை வென்றுள்ளது. இந்திய அணியில் 3 விதமான உலகக்கோப்பையையும் வென்ற பெருமை கேப்டன் தோனி வசமே உள்ளது. உலகக்கோப்பையை விராட் கோலி தலைமையும், தோனியின் அனுபவமும் இணைந்து வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
