‘எல்லோருக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ்’.. அடுத்த வருடம் விளையாட வருவாரா? காயத்துக்கு பின் வாட்சனின் உருக்கமான வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 16, 2019 01:51 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய வாட்சன் உணர்வுப்பூரவமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

WATCH: Watson has a heartfelt message for all CSK fans

ஐபிஎல் டி20 தொடரின் 12 -வது சீசனின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன்னில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் கோப்பையை நழுவவிட்டது. அப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரரான வாட்சன் கடைசி வரை அணியின் வெற்றிக்காக போராடினார்.

வாட்சன் தனது காலில் அடிப்பட்டு இருப்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இறுது வரை விளையாடியுள்ளார். ஆனால் இந்த தகவல் அப்போது வெளியாகவில்லை. பின்னர் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளாரான ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாட்சன் காலில் ரத்தக் காயத்துடன் விளையாடிய புகைப்படத்தை பதிவிட்டார். இது கிரிக்கெட் ரசிகர்களிடை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வாட்சனை கொண்டாடித்தீர்த்தனர்.

இதனை அடுத்து காலில் கட்டிப்போட்டு வாட்சன் நடந்து செல்லும் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் வாட்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,‘எனக்கு கடைசி வரை உறுதுணையான இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. விரைவில் குணமடைந்து அடுத்த வருடம் விளையாட வருகிறேன். விசில்போடு’என கூறியுள்ளார்.

Tags : #IPL #IPL2019 #WATTOMAN #YELLOVE #WHISTLEPODU