'போச்சுடா..'.. 'இந்திய அணிக்கு வந்த அடுத்த சோதனையா இது?'.. தவிப்பில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Jun 20, 2019 04:22 PM
உலகக் கோப்பைக்கான பயிற்சியின் போது, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசிய யார்க்கர் பந்து கணுக்காலில் பட்டதால், ஆல் ரவுண்டர் விஜயசங்கருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், இந்திய அணி அடுத்த சோதனைக் கட்டத்தை சந்தித்துள்ளது.

சமீபகாலமாகவே இந்திய அணி வீரர்களுக்கு அடுத்தடுத்து காயங்கள் ஏற்பட்டு வருவதால் ரசிகர்கள் பெருத்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். முன்னதாக தசைப்பிடிப்பு காரணமாக புவனேஷ்வர் குமார், அடுத்த 3 போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டது. எனினும் அவரின் காயத்தைப் பற்றிய உண்மை நிலவரம் கேள்விக்குறியாகவே உள்ளது.
அதன் பின்னர் ஷிகர் தவாணின் பெருவிரலில் ஏற்பட்ட எலும்புமுறிவு காரணமாக, அவர் இந்த உலகக் கோப்பை போட்டிகளில் இருந்தே முற்றாக விலகியுள்ள நிலையில் உருக்கமான பதிவொன்றையும் அவர் பதிவிட்டார். எனினும் ஷிகர் தவாணிற்கு பதிலாக இந்திய உலகக் கோப்பை அணியில் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் விஜய் சங்கருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை அன்று ஆப்கானிஸ்தானை இந்தியா எதிர்கொள்ளும் சூழலில், அதற்கான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, இவ்வாறு நிகழ்ந்ததாகவும், மாலைக்குள் அவருக்கு வலி குறைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
