அதிரடி மாற்றத்தை சந்திக்க போகும் இந்திய அணி..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிக பெரிய சர்ப்ரைஸ்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 20, 2019 06:49 PM

உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணி ஆரஞ்சு நிற ஜெர்சியில் களமிறங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

World Cup 2019: Team India to wear orange jersey against England match

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 -ல் வெற்றி பெற்று 7 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4 -வது இடத்தில் இருந்து வருகிறது. முன்னதாக டிரெண்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் நடைபெற இருந்த நியூஸிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக்க்கோப்பையில் தொடர்ந்து 7 -வது முறையாக பாகிஸ்தனை வென்று இந்தியா சாதனை படைத்தது. ஆனால் அப்போட்டியில் விளையாடிய போது வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் இனிவரும் சில போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. மேலும் காயத்தால் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் உலகக்கோப்பை தொடரில் இருந்தே வெளியேறினார். இது இந்திய ரசிகர்களிடையே அடுத்தடுத்து சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுக்கும் விதமாக, இங்கிலாந்து உடனான போட்டியின் போது இந்திய அணி வழக்கமான ஜெர்சியில் களமிறங்காமல் ஆரஞ்சு நிற ஜெர்சியில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் இதுகுறித்த எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகதது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை லீக் சுற்றின் அடுத்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை வரும் சனிக்கிழமை(22.06.2019) இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது.

Tags : #ICCWORLDCUP2019 #BCCI #TEAMINDIA #JERSEY