‘இது நான் எதிர்பார்த்தது தான்’... ‘தோனி குறித்து முன்னாள் கேப்டன்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Sep 02, 2019 11:18 AM
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின், இந்தியா வரும் தென் ஆப்ரிக்க அணி, 3 டி-20, மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டி-20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ., தேர்வு செய்து அறிவித்தது. இந்த தொடரில் அணியின் மூத்த வீரரான தோனி தேர்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘தென் ஆப்ரிக்க தொடரில் தோனி புறக்கணிக்கப்பட்டது, எதிர்பார்த்தது தான். இதை வைத்து அவரின் எதிர்காலத்தை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளனர் என்றும் தோன்றுகிறது. சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரை வைத்தும், எதிர்காலம் குறித்தும் அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளனர். பந்துக்கு அதிக வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளனர். தோனியும் இளம் வயதில் வந்த போதும், இதேநிலை தான் இருந்தது.
கேப்டன் விராட் கோலி தான் இந்திய கிரிக்கெட் அணிக்கு முக்கியம். கோலி தோனியிடம் நன்றாக பேசுகிறாரா? இல்லையா? என்பது முக்கியமல்ல. அதேநேரம் தோனியிடம், கோலி கேப்டனாக போட்டியில் என்ன எதிர்பார்கிறார் என்பதை வெளிப்படையாக சொல்வது மிகவும் கடினமானது. தோனிக்கும், தேர்வுக்குழுவினருக்கும் என்ன பேச்சுவார்த்தை நடக்கிறது என்பதில் இருந்து நான் கொஞ்சம் விலகியிருக்கிறேன்’ என்றார்.
