‘ஃபீல்டிங்கிலும் தெறிக்கவிட்ட இந்திய வீரர்’.. ‘வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அபார வெற்றி’.. ‘வைரலாகும் வீடியோ’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Sep 03, 2019 09:13 AM
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக விஹாரி 111 ரன்கள் எடுத்து டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அடுத்து இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதைத்தொடர்ந்து 299 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தால் 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
அபாரமான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20, ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் என 3 தொடர்களையும் கைப்பற்றியுள்ளது இந்திய அணி. இந்தத் தொடரின் 4வது நாள் ஆட்டத்தில் விராட் கோலி ஷமர் ப்ரூக்ஸை ரன் அவுட் செய்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. பேட்டிங்கில் மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கிலும் கலக்கிய கோலிக்கு நிபுணர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Kohli 🤙🤙pic.twitter.com/GBscGfoHF8
— Detective (@cheeku1896) September 2, 2019