'என்னமோ இருக்குதுபா இந்த பையன் கிட்ட'...'சாதனை படைத்த பும்ரா'...வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Sep 01, 2019 01:52 PM
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான 2 வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று தொடர்ந்தது. அதிரடியாக விளையாடிய விஹாரி, தனது முதல் சாதத்தை பதிவு செய்து அசத்தினார்.
இதனிடையே விஹாரி 111 ரன்களில் ஆட்டமிழக்க, அவருக்கு தோள் கொடுத்த இஷாந்த் சர்மா அரைசதம் விளாசினார். பின்னர் இந்திய அணி 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நிலையில், அந்த அணி 7 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3 வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
டேரன் பிராவோ, புரூக்ஸ், சேஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்தது மூலம் அவர் இந்த சாதனையை செய்தார். இதற்கு முன் ஹர்பஜன் சிங், இர்பான் பதான் ஆகியோர் டெஸ்ட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீத்தியுள்ளனர். பும்ராவின் இந்த சாதனை அவரை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.
What a hatrick !! Exceptional bowling from #Bumrah pic.twitter.com/HjJfAwfNwN
— Amrika Nirmalkar (@AmrikaNirmalkar) September 1, 2019