‘ஜஸ்ட் மிஸ்’ ‘ஹெல்மெட்டில் அடித்து பறந்த பந்து’.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Oct 10, 2019 06:36 PM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் மயங்க் அகர்வாலில் ஹெல்மெட்டில் பந்து பட்டு தலையில் சிறு காயம் ஏற்பட்டது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2 -வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். இதில் ரோஹித் ஷர்மா 14 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனை அடுத்து வந்த புஜாராவுடன் ஜோடி சேர்ந்த மயங்க் அகர்வால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதில் புஜாரா 58 ரன்கள் எடுத்திருந்தபோது ரபாடாவின் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் மயங்க் அகர்வால் கூட்டணி நிதானாமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் மயங்க் அகர்வால் இந்த டெஸ்ட் தொடரில் தனது இரண்டாவது சதத்தை (108) பதிவு செய்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை எடுத்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் 11 -வது ஓவரின் போது தென் ஆப்பிரிக்க வீரர் ஆன்ரிச் வீசிய பந்து மயங்க் அக்ர்வால் ஹெல்மெட்டில் பலமாக தாக்கியது. இதனால் அவரின் தலையில் சிறுகாயம் ஏற்ப்பட்டது. உடனடியாக மைதானத்திலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் விளையாட ஆரம்பித்தார்.
— Jatin hasija (@j_hasija) October 10, 2019