"'பும்ரா', 'ஷமி'ன்னு யாராலயும் முடியல... வந்த முதல் மேட்சே தட்டித் 'தூக்கிட்டோம்'ல..." வேற 'லெவல்' 'சம்பவம்' செய்த சின்னப்பம்பட்டி 'சிங்கம்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில், தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் முதல் முறையாக சர்வதேச போட்டிக்காக களமிறங்கியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த நடராஜன், யார்க்கர் பந்துகளை மிக துல்லியமாக வீசியதன் மூலம் கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தார். தோனி, டிவில்லியர்ஸ் உட்பட பல முக்கியமான விக்கெட்டுகளையும் ஐபிஎல் போட்டிகளில் அவர் வீழ்த்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி 20 தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது. முதல் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில், இன்று நடராஜனுக்கு அணியில் இடம் கிடைத்தது. அது மட்டுமில்லாமல், தான் களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான மார்னஸை போல்டு எடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.
முதல் சர்வதேச விக்கெட்டை எடுத்த நடராஜனுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இன்னொரு முக்கியமான விஷயத்தையும் அவர் செய்துள்ளார். அதாவது, இந்தியா ஆடிய கடைசி 6 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி பவர்பிளே ஓவர்களான முதல் பத்து ஓவர்களில் விக்கெட்டுகளே எடுத்ததில்லை.
ஆனால், இன்று ஆறாவது ஓவரிலேயே விக்கெட்டை எடுத்து நடராஜன் அசத்தியுள்ளார். பும்ரா, ஷமி, சைனி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இருந்தும் முடியாத விஷயத்தை தான் களமிறங்கிய முதல் போட்டியிலேயே நிகழ்த்திக் காட்டி மாஸ் காட்டியுள்ளார் நடராஜன்.