"'தோனி' சொல்லிக் குடுத்த 'விஷயம்' தான் அது... அத அப்டியே செஞ்சும் காட்டிட்டேன்..." 'மனம்' திறந்த 'ஜடேஜா'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், இக்கட்டான நிலைமையில் இருந்த அணியை ஆறாவது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக ஆடி நல்ல ஸ்கோரை எட்ட உதவினர். இதன் காரணமாக, இந்திய அணி ஒரு நாள் தொடரில் ஆறுதல் வெற்றி ஒன்றை பெற்றது.
இந்நிலையில், போட்டிக்கு பின்னர் பேசிய ஜடேஜா, 'முன்னாள் கேப்டன் தோனியுடன் இணைந்து இந்திய அணியிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் ஆடியுள்ளேன். தோனி தன்னுடன் பேட்டிங் செய்யும் வீரருடன் ஓரளவுக்கு நிலைத்து விட்டால், பின்னர் இறுதியில் பெரிய ஷாட்களை அடிக்க ஆரம்பித்து விடுவார். சில இக்கட்டான நிலையில் அவருடன் இணைந்து பேட்டிங் செய்த போது அவர் என்னிடம் சொல்வது, கடைசி வரை நாம் ஆட்டத்தை எடுத்துச் சென்றால், கடைசி 5 ஓவர்களில் நிறைய ரன்களை குவிக்க வேண்டும். அதுவரை வேறு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான்.
அதே போல ஒரு ஆட்டத்தை தான் இன்று நானும், ஹர்திக் பாண்டியாவும் ஆடினோம். தோனியின் ஸ்டைலை மனதில் வைத்து தான் அப்படி ஆட முடிந்தது' என தெரிவித்தார். இரண்டாவது போட்டியில் தான் தவற விட்ட கேட்ச் குறித்து பேசிய ஜடேஜா, 'அந்த கேட்சை தவற விட்ட பின்னர் எனக்கு தூக்கமே வரவில்லை. அதை பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தேன். இனிமேல் எனது கைக்கு வரும் கேட்சை 50 சதவீதம் தான் பிடிக்க முடியும் என்றாலும் அதனை நிச்சயம் பிடித்து வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இதற்காக கூடுதல் பயிற்சிகளை மேற்கொண்டேன்' என தெரிவித்தார்.