‘கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு’.. திடீரென அறிவித்த இந்திய மகளிர் கிரிக்கெட் ப்ளேயர்..! காரணம் என்ன..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Sep 03, 2019 03:33 PM
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான மித்தாலி ராஜ், கடந்த 2006 -ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 88 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மித்தாலி ராஜ் மொத்தமாக 2364 ரன்களை எடுத்துள்ளார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.
இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘2006 -ம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட் இந்தியா சார்பாக விளையாட ஆரம்பித்தேன். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, 2021 -ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக்கோப்பைக்கு என்னை தயார் படுத்த உள்ளேன். என்னுடைய கனவு இந்தியாவுக்காக உலகக்கோப்பை வென்று கொடுப்பதுதான். அதற்காக என்னால் முடிந்த பங்களிப்பை தருவேன். எனக்கு ஆதரவளித்த பிசிசிஐ -க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வரயிருக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாட எனது வாழ்த்துக்கள்’ என மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.