'கேப்டனாத் தானே பாத்துருப்பீங்க இந்த கோலிய'... 'இதுல வேற மாதிரி பாப்பீங்க'.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jul 09, 2019 03:04 PM

உலகக் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டிகள் நெருங்கும் வேளையில் அரையிறுதிப் போட்டிகள் தொடங்கிவிட்டன.

Virat Kohli gets the Wicket of Williamson in U19 video

முன்னதாக இந்திய அணி விளையாண்ட டெஸ்ட் மேட்ச்களில் கோலியின் கள  ஆக்ரோஷத்தைப் பார்க்க முடிந்தது. பலரும் கோலியின் கள ஆக்ரோஷத்தை விமர்சித்தனர். ஆனாலும் சில வீரர்கள் இந்த கள ஆக்ரோஷம் ஆரோக்கியமானது என்று கூறினர்.

மிகக் குறுகிய காலத்தில் பல முன்னணி  வீரர்கள் பலரின் சாதனைகளை ஒரு கேப்டனாக டெஸ்ட் மேட்சிலும்,  அதனைத் தொடர்ந்து உலகக் கோப்பையின் லீக் போட்டியின், இன்னிங்ஸ் பலவற்றிலும் அரங்கேற்றியுள்ளார். இந்த நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

அரையிறுதியில் நியூஸிலாந்துடன் இந்தியா இன்று மோதும் சூழலில், 2008-ஆம் ஆண்டு U19 போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான  போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த கோலி, விக்கெட் கீப்பராகவும் இருந்துள்ளார். அந்த போட்டியில் கேன் வில்லியம்சனின் விக்கெட்டை கைப்பற்றியிருப்பார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

Tags : #VIRATKOHLI #INDVNZ