'அவங்க பார்ட்னர்ஷிப் .. அதுலயும் குறிப்பா தோனி..’ அப்படி என்ன சொன்னார் கோலி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Jul 01, 2019 09:34 AM
நேற்றைய தினம், இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடிய போட்டியில் 338 என்கிற இங்கிலாந்து அணியின் இமாலய டார்கெட்டை தொட முடியாமல் இந்தியா 306 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதால் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இங்கிலாந்து வலுவாக பெற்றுள்ளது.

உலகக் கோப்பை போட்டியில் இந்தியா சந்திக்கும் முதல் தோல்வியான, இந்தத் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், தோனி மற்றும் கேதர் ஜாதவின் பார்ட்னர்ஷிப் மீதான விமர்சனம் மீண்டும் எழுந்துள்ளது. ஆப்கானின்ஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளைத் தொடர்ந்து தற்போது மீண்டும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் தோனி-கேதர் ஜாதவ் கூட்டணி சிங்கிள்ஸ் எடுத்து அணியின் தோல்விக்கு காரணமாகியுள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தோல்வி குறித்து பேசிய விராட் கோலி, எந்த அணியும் தோல்வியை விரும்ப மாட்டார்கள், ஆனால் ஒவ்வொரு அணியுமே 2,3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளன. இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்காக தாங்கள் வகுத்த திட்டங்களில் தீவிரத்துடன் இருந்தார்கள். விக்கெட்டுகளை விரைவாக இழந்ததும் தோல்விக்கு முக்கியமான காரணம். ஆக, தோல்வியைத் தள்ளிவைத்துவிட்டு, இதுபோன்ற ஃபிளாட்டான பிட்சுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.
மேலும், தோனி, கேதர் ஜாதவின் இறுதி ஓவர் ஆட்டம் பற்றி அவர்களிடம் பேச வேண்டும் என்றும் கடினமான ஷாட்களை அட்டெண்ட் பண்ண முயன்றார் தோனி; ஆனால் இங்கிலாந்து வீரர்களின் சிறப்பான பந்துவீச்சுகளால், அது முடியாமல் போனதாகக் கருதுகிறேன். அடுத்தடுத்து வரவிருக்கும் ஆட்டங்களில், அணியின் பெர்ஃபார்மென்ஸை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கோலி பேசியுள்ளார்.
