‘மனசுல நின்னுட்டீங்க கோலி’.. வெற்றிக்குபின் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்..! வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 03, 2019 12:48 AM

இந்தியா-வங்கதேசத்துக்கு இடையேயான போட்டியில் வயதான ரசிகையிடம் விராட் கோலி பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

WATCH: 87 year old Indian fan became a social media sensation

வங்கதேசத்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 104 ரன்களும் கே.எல்.ராகுல் 77 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்தேச அணி 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் பும்ரா 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி மற்றும் சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்நிலையில் போட்டி முடிந்தபின் 87 வயதான இந்திய அணியின் ரசிகை ஒருவருடன் விராட் கோலியும், ரோஹித் ஷர்மாவும் பேசிவிட்டு சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக இவர் இந்திய அணியின் பேட்டிங்கை உற்சாகமாக கண்டு ரசித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

Tags : #ICCWORLDCUP2019 #VIRATKOHLI #INDVBAN #TEAMINDIA