‘பல வருடமா யாரும் நெருங்காத சச்சினின் மாபெரும் சாதனை’.. 27 ரன்னில் முறியடிக்க காத்திருக்கும் இந்திய அதிரடி வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 08, 2019 11:52 PM
உலகக்கோப்பையில் சச்சினின் சாதனையை முறியடிக்க ரோஹித் ஷர்மாவுக்கும் இன்னும் 27 ரன்கள் உள்ளன.
உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டி நாளை(09.07.2019) மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் பலபரீட்சை நடத்த உள்ளன. இதுவரை நடந்த உலகக்கோப்பை லீக் போட்டிகளில் இரு அணிகளும் மோதிக்கொள்ளவில்லை. அப்போட்டி மழையால் தடைபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இரு அணிகளும் அரையிறுதியை வெல்ல முனைப்பு காட்டி வருகிறது. இது இரு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் சச்சினின் சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மாவுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. இதுவரை விளையாடிய போட்டிகளில் 5 சதங்களை விளாசி மொத்தமாக 647 ரன்களை அவர் எடுத்துள்ளார். இதன்மூலம் இந்த உலகக்கோப்பை சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோஹித் ஷர்மா முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். அதேபோல் இதுவரை நடந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின்(673)தான் முதல் இடத்தில் இருந்து வருகிறார்.
இந்த சாதனையை முறியடிக்க ரோஹித் ஷர்மாவுக்கு இன்னும் 27 ரன்கள்தான் தேவையாக உள்ளது. இதனால் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்த ரன்களை அடித்தால் சச்சினின் நீண்டகால சாதனையை ரோஹித் ஷர்மா முறியடிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் 53 ரன்கள் எடுத்தால் உலகக்கோப்பையில் 700 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் அடைய வாய்ப்பு உள்ளது.