'நீங்க சொதப்பிக்கிட்டே இருங்க'... 'இனிமேல் அவர் இறங்கட்டும்'... 'இந்திய அணியில்' அதிரடி மாற்றம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jul 02, 2019 09:08 AM

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில், இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்ய கோலி ஆராந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

India could make changes to the opening combination

உலகக்கோப்பை போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பர்மிங்ஹாமில் நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியிடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த இந்திய அணியின் இந்த தோல்வி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. அதிலும் இந்திய அணியின் பேட்டிங் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்திய அணி தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகளின் அரையிறுதி கனவு தவிடு பொடியானது.

இதனிடையே இந்திய அணியில்  மிடில் ஆர்டர் மிகவும் சொதப்பலாக உள்ளது. இந்த காரணத்தால் தான் இந்திய அணி தோல்வியை சந்தித்தது என விமர்சனங்கள் எழுந்தன.இந்நிலையில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில், தோனியின் பேட்டிங் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. அவரின் பேட்டிங் ஆமை வேகத்தில் இருந்தது என பல முன்னாள் வீரர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்தார்கள்.

 இந்நிலையில் தொடர்ந்து சொதப்பி வரும், தொடக்க வீரரான ராகுலை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அனுபவ தினேஷ் கார்த்திக்கை களமிறக்க, கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.