'இப்டியே பண்ணிட்டிருந்தா, அரையிறுதிக்கு முன்னேறினாலும்'... 'விராட் கோலிக்கு எழுந்த புது சிக்கல்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jul 04, 2019 12:52 PM
நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் விராட் கோலிக்கு, உலகக் கோப்பை தொடரில் புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.
உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய்கிழமை நடைப்பெற்ற ஆட்டத்தில், முகமது ஷமி வீசிய பந்தை சவுமியா சர்கார் தடுத்தாட முயன்றார். அப்போது அவுட் என நினைத்ததால், விராட் கோலி அப்பீல் கேட்க நடுவரோ மறுத்துவிட்டார். இதனால் ரிவியூ வாய்ப்பை பயன்படுத்தியபோது, இந்தியாவுக்கு ரிவியூ வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த விராட் கோலி, நடுவர்களிடம் விவாதம் செய்தார். இதனால் நடுவரிடம் அபராதத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது. ஆனால், நடுவர்கள் இதுகுறித்து புகார் செய்யவில்லை.
ஏற்கனவே உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், நடுவர் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவருக்கு 25 சதவிகிதம் அபராதத்துடன் டீ மெரிட் புள்ளி ஒன்றும் வழங்கப்பட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டு, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக விராட் கோலி, ஒரு டீ மெரிட் புள்ளி பெற்றிருந்தார். இதனால் விராட் கோலி தற்போது 2 டீ மெரிட் புள்ளிகள் பெற்றுள்ளார்.
ஐசிசி விதிப்படி ஒரு வீரர் 24 மாதத்திற்குள் 4 டீ மெரிட் புள்ளிகள் பெற்றால், அது சஸ்பென்ஷன் புள்ளிகளாக மாற்றப்படும். 2 சஸ்பென்ஷன் புள்ளிகள் பெற்றால், ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் அல்லது 2 டி20, இதில் எது முதலில் வருகிறதோ, அதில் விளையாட தடைவிதிக்கப்படும். ஒருவேளை இலங்கைக்கு எதிரான போட்டியில், விராட் கோலி இதுபோன்று செயல்பட்டால் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிகிறது. ஒருவேளை 2 புள்ளிகள் பெற்றால் விராட் கோலியால், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படும்.