'தொடக்கத்திலேயே பௌலிங்கா?'... 'ஆச்சரியத்தில் மூழ்கிய வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jun 18, 2019 03:54 PM
உலகக் கோப்பையில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தது, தனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளிப்பதாக ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில், கடந்த 16-ம் தேதி இந்திய- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், பாகிஸ்தானுக்கு எதிராக புவனேஷ்வர் குமார் பந்துவீசினார். அப்போது எதிர்பாரதவிதமாக அவருக்கு காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விஜய் சங்கர் பந்துவீச அழைக்கப்பட்டார். அவர் தனது முதல் பந்திலேயே இமாம்-உல்-ஹக்கை எல்.பி.டபிள்யு ஆக்கினார்.
தொடர்ந்து பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் விக்கெட்டையும், விஜய் சங்கர் சாய்க்கவே ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து விஜய் சங்கர் கூறுகையில், 'பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நான் சூழலுக்கு ஏற்றவாறு ஒத்துப்போனேன். துவக்கத்திலேயே பந்துவீச அழைத்தது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. அதுவும் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தது, எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது' என்று தெரிவித்தார்.
உலகக் கோப்பை தொடரில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் மற்றும் 3-வது வீரர் என்ற பெருமையை விஜய் சங்கர் பெற்றார். இந்த சாதனையை இதற்கு முன் பெர்முடா வீரர் மலாச்சி ஜோன்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் இயான் ஹார்வே ஆகியோர் நிகழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.