'நீங்க அவுட்டுனு நினைக்க இதுதான் காரணம்'... 'தல தோனியின் பதிலால் அதிர்ந்த விராட் கோலி'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jun 17, 2019 06:01 PM
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பயன்படுத்தி வரும் 'பேட்' தான், அவர் அவுட் என நினைக்க காரணமாக இருந்தது என தெரியவந்துள்ளது.
உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடந்தப் போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், விராட் கோலி அதிரடியாக ஆடி வந்தார். இவர் 65 பந்தில் 77 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் அடக்கம். விராட் கோலி 77 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது அமிர் பந்தில், பேட்டில் பட்டதாக நினைத்து வெளியேறினார்.
நடுவர் அவுட் கொடுக்காமலே இவர் அவுட் என்று நினைத்து வெளியேறினார். பந்து அவர் பேட்டை கடந்து சென்றபோது டொக் என்று சத்தம் கேட்டது. அதேபோல் கோலியின் பேட்டும் லேசாக அதிர்ந்தது. இதனால் பேட்டில் பந்து பட்டதாக அவர் நினைத்தார். ஆனால் உண்மையில் ரிப்ளேயில் கோலி அவுட் இல்லை என்பது தெரிந்தது. இந்த நிலையில் கோலி பெவிலியன் சென்ற பின் அவரின் பேட்டை தோனி வாங்கி சோதனை செய்து பார்த்தார்.
அதன்பின் கோலியின் பேட்டில் ஹேண்டில் லூஸாக இருக்கிறது. அதனால் சத்தம் வருகிறது, அதனால்தான் பேட் ஆடியது என்பதை கண்டுப்பிடித்து தோனி குறிப்பிட்டார். இதற்குப் பின்னர் கோலியும் சோதித்து பார்த்தார். கோலி மீண்டும் பேட்டை ஆட்டும் போது, இதேபோல் சத்தம் வந்தது. இதைத்தான் அவர் பந்து பட்டது என்று நினைத்துக் கொண்டு வெளியேறி இருக்கிறார்.
Kohli whyyy did you walk away??? #INDvPAK #ICCWorldCup2019 pic.twitter.com/vEfybHqPcI
— Rahul (@Legendelof) June 16, 2019